Sunday, March 4, 2012

புதிய நீர்க்கொள்கை-இந்திய மக்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள்.

மத்திய அரசின் புதிய வரிவிதிப்பில் தண்ணீர்:மற்றும் தனியார் மயமாக்கப்படும் நீர்ஆதாரங்கள்.

அண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட தேசிய நீர்க்கொள்(ளை)கை-2012 கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த வரைவு திட்டத்தை ப்படித்த அனைவரும் காங்கிரஸ் அரசின் உயரிய சிந்தனையை க்கண்டும்,அதன் தொலை நோக்கு பார்வையை கண்டும் பெருமிதம் கொண்டிருப்பார்கள்.சில உப்பு போட்டு உணவு உண்பவர்களும்,சுய சிந்தனை உள்ளவர்களும் அதை கடுமையாக எதிர்த்தார்கள். நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள் என்று படித்து முடித்து விட்டு முடிவு செய்யுங்கள்..அப்படி என்ன சொல்கிறது ,புதிய வரைவு திட்டம்.?

முதலில் அதன் தேவை என்ன? இதற்கு முன் 2002ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிறது.அது நீர்ப்பயன்பாடு, நிலத்தடி நீராதாரங்கள்,அவற்றை பாதுகாப்பது, நீர்வழித்தடங்கள்,கால்வாய்கள், நீர் வள ஆதார அமைப்புகளை பாதுகாப்பது,செறிவூட்டுவது,மற்றும் மேம்படுத்துவது சம்பந்தமாகவும்,அதற்கு தேவையான நிதி ஆதார்ங்கள்,தொழில் நுட்பஉதவிகள்,மக்களிடம்விழிப்புணர்வு,துல்லிய நீர்ப்பயன்பாடு,மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை போன்றவற்றைப்பற்றிய மாநில அரசின் பங்களிப்பையும்,மத்திய அரசின் பங்களிப்பையும் பற்றியும், விளக்கமான ஒரு வரைவாக இருக்கிறது,அது இதற்கு முந்தைய 1987ல் கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க்கொள்கையை விட பலபடிகள் மேலானதாகவும்,சிறந்ததாகவும் இருந்து வருகிறது.ஆனாலும் மாநிலங்களுக்கிடையேயான நீர்ப்பங்கீடு,புதிய பாசன அமைப்புகள்,அவற்றின் செய்ல்பாடுகள் எதுவும் இந்த வரைவில் தெளிவாக சொல்லப்படவில்லை, ஸ்வஜல்தார,iam warm திட்டங்கள்,சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ள வேளையில் upa2 அரசாங்கம் இரண்டு சமூக நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது

.1. நிலத்தடி நீர்,உள்மாநிலத்தில் உள்ள நீர்னிலைகள்,மற்றும் நிலத்தடி நீராதார்ங்களில் மக்களுக்கோ,அந்தந்த மாநில அரசுகளுக்கோ எந்த வித உரிமையும் இல்லை,அனைத்து மத்திய அரசுக்கே உரியது என்றும் அவை தனியாருக்கு ஏல முறையில் திறந்து விடப்படும் என்றும்
,2.தண்ணீர்,மற்றும் கழிவு நீருக்கு வரி விதிப்பது என்றும் முடிவு எடுத்து அறிவித்து இருக்கிறது..மேலும் பாசனம்,குடி நீர் வினியோகம்,கழிவு நீர் மேலாண்மை,சுகாதாரம் ஆகிவற்றில் இருந்து அரசாங்கம் முழுவதும் விலகி தனியார்களை இந்த துறையில் ஈடுபடுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது..

இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், இரு அரசாங்கங்கள் பட்டியல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இதில் மாநில பட்டியலில் 17-வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை அடங்கியுள்ளன. புதிய கொள்கை இதை மறுத்து ஒரு சட்டம் உரு வாக்கப்பட வேண்டுமென்கிறது. அதேபோல 1882-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையில்லை என்று மாற்றவேண்டுமென்கிறது புதிய கொள்கை. .இதன் படி குடிதண்ணீரோ,ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்கப் பட வேண்டும் என்கிறது மத்திய அரசு.
இதில் ஒரேயடியாக மக்களின் பாரம்பரிய உரிமையும்,மா நிலங்களின் உரிமையையும்,உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் ஒருங்கே பறிக்கிறது.
மேலும் இதன் படி கிராமங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40லிட்டருக்கு மிகாமலும், நகரத்தில் ஒரு நபருக்கு 80 லிட்டருக்கு மிகாமலும் குறைந்த பட்ச விலையில் வழங்கவும், அதற்கு மேல் உபயோகப்படுத்தப்படும் நீருக்கு அடுக்கு முறையில் வரி விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் நீங்கள் வெளியேற்றும் கழிவு நீருக்கு தனி வரி, என்ற புதிய சிந்தனையையும் முன் வைத்திருக்கிறது..
இதோடு 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது.அதாவது முதலில் குடிநீர்,
2) விவசாயம்,
3) நீர் மின்சாரம்,
4) சுற்றுச்சூழல்,
5) விவசாயம் சார் மற்றும் விவசாயம் சாரா தொழில்கள்,
6) போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடுகள் என்பதுதான் அந்த முன்னுரிமை வரிசை.

இனி அப்படி இல்லாமல் குடி நீருக்கோ,விவசாயத்திற்கோ நீர் இல்லாவிட்டாலும் வாட்டர் தீம்பார்க்குகளுக்கும்,அரசியல் வாதிகளின் பெருந்தொழிற்சாலைகளுக்கும் நீர் தங்கு தடையின்றி வழங்கப்படும்,இது தான் அரசு சொல்ல விரும்பும் செய்தி..
சாதாரண மக்கள் நீர் குடிக்கும் உரிமையை கூட பறித்து அதை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று தான் இந்த தேசத்தை வளப்படுத்த வேண்டுமா?மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திரு.மன்மோகன்சிங் அவர்களே(மனசாட்சி இருந்தால்) இது தேசத்தையும்,மக்களையும் வளப்படுத்தத்தானா இந்த வரி.மனித இனத்தின் அடிப்படை உரிமையான தண்ணீரை வெறும் வணிகப்பொருளாக மட்டுமே பார்க்கும் காங்கிரஸ் அரசின் பார்வையே வக்கிரமானதாகவும்,அருவெறுப்பூட்டுவதாகவும் உள்ளது.இது உங்களையும் நம்பி ஓட்டு போட்ட மக்களை ஒருங்கே வஞ்சிக்கும் செயல் அல்லாமல் வேறு என்ன? 2009ல் ஐ. நா வில் குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளுக்கும், நீரைத்தாயாகவும், கடவுளாகவும் வழிபடும் பாரதப்பண்பாட்டில் வந்து விட்டு அதே அசிங்கத்தை நீங்கள் உங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது திணீக்கிறீர்களே இது ஞாயம் தானா?

விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. நீங்கள் உலக வங்கியின் ஒரு பொருளாதார அடியாளை விட மோசமாக செயல்படுவதும்,இந்தியாவையும்,அதன் ஆன்மாவையும் கூட யாரிடமாவது அடகு வைத்து பொருளீட்டலாம் என்று நினைக்கிறீர்களே, நீங்கள் படித்த கல்வியும்,உங்கள் நாகரீகமும் இவ்வளவு தானா? தண்னீர் என்பது வெறும் லாபம் மட்டுமே ஈட்டும் நீலத்தங்கமாக மட்டுமா உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான நோகளால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 இலட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக் கொடிய இருபெரும் நோகளான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் நோ தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை..இவற்றை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாமல் இந்திய தண்ணீர் சந்தையை உலகப்பெரு நிறுவனங்களுக்கு ஏல முறையில் திறந்து விடலாம் என்று யோசனை சொல்ல உங்களுக்கும்,உங்கள் அமைச்சரவைக்கும் வெக்கமாக இல்லை. class 7ல் நீர் என்பது வெறும் ஒரு வரிவிதிப்பு பண்டமாக மட்டுமே பார்க்கும் பார்வையை என்ன சொல்வது?

7. WATER PRICING
7.1 Over and above the pre-emptive uses for sustaining life and eco-system,
water needs to be treated as an economic good and therefore, may be priced to
promote efficient use and maximizing value from water. While the practice of
administered prices may have to be continued,

நீருக்கு வரி விதப்பதிற்கு மன்மோகன்,சோனியா சொல்லும் ஞாயம் என்ன என்றால் 2 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் 80 கோடி பேர் உள்ளனர்,அரசின் பெரும்பாலான சேவைகளான ரயில்,பொதுபோக்குவரத்து மற்றும் இன்ன பிற சமூக நலத்திட்டத்தின் பயனாளிகள் நடுத்தர மக்களும் கீழ் நடுத்தர,மற்றும் வறுமைக்கோட்டுக்கு அருகிலும் கீழும் வசிக்கும் மக்கள் தான் .ஆனால் அவர்கள் வரி எதையும் நேரடியாக செலுத்துவதில்லை.எனவே இவர்களை நேரடியாக வரி செலுத்தும் அமைப்புக்குள் கொண்டு வரும் விதமாக இவர்கள் அதிகம் உபயோகிக்கும் தண்ணீர் மற்றும் உப்பு மீது வரி விதிக்கலாம் என்ற அரிய கருத்தை முன் வைக்கிறார்கள்.மன்மோகன் சொல்ல வருவது என்னஎன்றால் பணக்காரகளுக்கும்,பெரும் பணக்கரார்களுக்கு மட்டுமே அதிக வரி என்பது அநியாயம்,ஏழைகளும் ,பரம ஏழைகளும், நடுத்தர மக்களும் அதிகமாக அரசாங்கத்தை சார்ந்து இருந்து கொண்டு சுகமாக வாழ்கிறார்கள் அது நியாயமிலை.எனவே தான் அவர்கள் உபயோகிக்கும் தண்ணீருக்கு வரி விதிக்க வேண்டும் என்ற அரிய யோசனையை முன் வைக்கிறார்..அலுவாலியா என்ற மேதை சொல்கிறார் ஒரு ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி 2,00,000 லிட்டருக்கு மேல் தண்ணீரை செலவு செய்து விவசாயம் பார்க்கிறார்,அவர் ஈட்டும் வருமானமோ ஒரு லட்சத்திற்கும் கீழ்,அரசுக்கும் வருமானம் இல்லை வெறும் செலவு தான் .இதுவே ஒரு டாஸ்மாக் சேல்ஸ்மேனோ,தரகு வணிகத்தில் இருப்பவரோ 40,000 லிட்டரை மட்டுமே உபயோகிக்கிறார் ஆனால் அரசுக்கு இவரால் வருமனம் வருகிறது..எனவே நீரை வீணாக்கும் விவசாயிக்கு அதிக வரியும்,குறைவான நீரை உபயோகிக்கும் தரகருக்கு குறைவான வரியும் விதிக்க்கப்பட வேண்டும் என்கிறார். ஞாயம் தானே?
ஒரு உயிர் வேலியை ஏற்படுத்தி உப்புக்கு வரி விதித்து மக்களின் மீது பஞ்சத்தையும்,பசி,பட்டினியையும் செய்ற்கையாக திணித்த ஆலன் ஆக்டேவியன் ஹீயூமின் வாரிசுகள் அல்லவா? வேறு எப்படி யோசிப்பார்கள்.?உப்பு வேலி ,உயிர் வேலி பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளை படித்தால் இப்போது கூட மனம் படைபதைக்கும் http://www.jeyamohan.in/?p=21029,
http://www.jeyamohan.in/?p=21506.

நீர் என்பது வெறும் பொருளாதாரப்பண்டமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சமூக நீதிக்கு எதிரானதாகும்.
ஒரு அரசின் கடமை என்பது அதன் மக்களுக்கு பாதுகாப்பான குடி நீர் வழங்க வேண்டியது, ஆனால் அரசு குடி நீர்,சுகாதாரம்,கல்வி,தொலைதொடர்பு,ராணுவம்,வங்கி,காப்பீடு,சுரங்கம்,ஆற்றல் இவற்றை தனியார் வசம் ஒப்படைத்து விட்டு,சாராயம் காய்ச்சுவது,விபாசாரம் செய்வது,இன்ன பிற போதை வஸ்துக்களை விற்பது போன்ற சேவைகளை மட்டுமே செய்யலாம் என்ற முன் யோசனையில் செயல்படுவதாக தெரிகிறது.

மேலும் 40 லிட்டருக்கு குறைவான நீரை ஒரு மனிதன் எப்படி பயன்படுத்த முடியும் இந்த நாகரீக உலகில்,இந்தியர்களின் உணவுப்பழ்க்கம் மற்றும் கழிவறை,கழிவு பழக்கங்களை கொண்டு சராசரி இந்தியனுக்கு ஒரு நாளக்கு 66 லிட்டர் நீர் தேவை என்று உல சுகாதர நிறுவனம் சொல்கிறது..மேலும் ஒரு மனிதனின் குடி நீர்,உணவு,சுகாதார நடவடிக்கைகள்,தொழில் உபயோகங்கள் இவற்றை கருத்தில் கொண்டால் ஒரு மனிதனின் percapita water need 185 லிட்டர் ஆகும்.40லிட்டருக்கு மேல் செலவாகும் 145லிட்டருக்கும் அவன் வரிகட்டினால் மட்டுமே நீரைக்குடிக்கவோ,கழிவறையில் சுத்தம் செய்யவோ முடியும்..வரி கட்ட முடியாதவர்கள் நீர் உபயோகிப்பதை சட்டம் போட்டு தடுப்போம் என்கிறது மத்திய அரசு.(பார்க்க 7ம் படிவம்)..ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய 600 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.இப்போது அரிசி விலை 40 ரூபாய்,இனி 100ரூபாய்க்கு மேல் போனால் யாரும் அதிசயப்படாதீர்கள்.
நிலத்தடி நீரை நீங்கள் உபயோகித்தால் அதற்கும் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். நீர் என்பது பாரம்பரியமான உரிமை இல்லை அது ஒரு பொருளாதார கருவி மட்டுமே.என்கிறது புதிய வரைவு.இனிமேல் நீங்கள் தண்னீர் தாகம் அடித்தால் பெக்டெல்,வெண்டி,டாடா,ரிலையன்ஸ் போன்ற தண்ணீர் வழங்கும் பெரு நிறுவங்கள் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் தண்ணீர் குடிக்க முடியும்.மீறி தாகம் அடிக்கிறது என்று நீரைக்குடித்தால் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் ஜாக்கிரதை.இவ்வளவு நல்ல சட்ட முன்வரைவை வைத்து மக்களின் உரிமைகளை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்குகிறது.
நீர் என்பதை தனியார்மயமாக்குவதாலும்,அரசின் கண்காணிப்பிலிருந்து விலக்குவதாலும் பெரும்பான்மையான மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் மறுக்கப்படுகிறது.இதனால் ஏற்படும் சமூக சீர்குலைவுக்கும்,பல்லாயிரம் மக்களின் சாவிற்கும் ,சுகாதாரக்கேடான வாழ்விற்கும் இந்த காங்கிரஸ் அரசே பொறுப்பேற்க வேண்டும்.
தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது உங்களது வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆகவேண்டிய விசயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டு வந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.அதை இந்திய அரசு மறுபரிசீலனை செய்து தன் தாய் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறது..
இதையும் வழக்கம் போல ஏற்று கொள்ளப்போகிறோமா? இல்லை நம் எதிப்பை பதிவு செய்யப்போகிறோமா?

http://mowr.gov.in/writereaddata/linkimages/DraftNWP2012_English9353289094.pdf

http://mowr.gov.in/writereaddata/linkimages/nwp20025617515534.pdf

http://www.newstatesman.com/environment/2010/03/water-cyprus-pakistan-yemen

http://www.globalissues.org/article/601/water-and-development

Saturday, September 10, 2011

Cable சங்கர்: குறும்படம் - ரோட்சைட் அம்பானி

Cable சங்கர்: குறும்படம் - ரோட்சைட் அம்பானி

Wednesday, September 7, 2011

http://gandhiheritage.org/

Friday, August 26, 2011

Hi friends..........an interesting movie is running house full in India.........havent you seen or heard about it...........better watch it during the weekend.................



Starring


Hero :- Manmohan Singh




Heroine :- Sonia Gandhi


Supporting Hero :- A Raja , Suresh Kalmadi



Supporting Heroine :- Kanimozhi



Main Villain: - Anna Hazare




Supporting Villain :- Baba Ramdev





Script By :- Pranab Mukherjee





Comedy Role :- Kapil Sibal & P Chidambaram



Friendly Appearance:- Dig Vijay Singh




Characterless actor: Sharad Pawar

Dancer:- Mayavati


Action:- Delhi Police



Banking Partners:- Madhu Koda , Laloo Prasad yadav & Hasan Ali



Guest appearance: Ajmal Kasab & Afzal Guru



Financed By :- POOR TAXPAYERS OF INDIA



Forward This Mail To Every One Till Our Country Awakes


Must Read ! Very Powerfully Worded. Bravo - Prakash Bajaj, Editor of
Times of India .

LETTER OF THE EDITOR OF "THE TIMES OF INDIA " TO THE PRIME MINISTER OF INDIA

I am born and brought up in Mumbai for last fifty eight years. Believe me, corruption in Maharashtra is worse than that in Bihar . Look at all the politicians, Sharad Pawar, Chagan Bhujbal, Narayan Rane, Bal Thackray , Gopinath Munde, Raj Thackray, Vilasrao Deshmukh all are rolling in money. Vilasrao Deshmukh is one of the worst Chief ministers I have seen. His only business is to increase the FSI every other day, make money and send it to Delhi , so Congress can fight next election. Now the clown has found new way and will increase FSI for fishermen, so they can build concrete houses right on sea shore. Next time terrorists can comfortably live in those houses, enjoy the beauty of the sea and then attack our Mumbai at their will.

Recently, I had to purchase a house in Mumbai. I met about two dozen builders. Everybody wanted about 30% in black. A common person like me knows this and with all your intelligence agency & CBI, you and your finance ministers are not aware of it. Where all the black money goes? To the underworld, isn't it? Our politicians take help of these goondas to vacate people by force. I myself was victim of it. If you have time please come to me, I will tell you everything.

If this has been a land of fools, idiots, then I would not have ever cared to write to you this letter. Just see the tragedy. On one side we are reaching moon, people are so intelligent; and on the other side, you politicians have converted nectar into deadly poison.I am everything - Hindu, Muslim, Christian, Scheduled Caste, OBC, Muslim OBC, Christian Scheduled Caste, and Creamy Scheduled Caste; only what I am not is INDIAN. You politicians have raped every part of Mother India by your policy of divide and rule.

Take example of our Former President Abdul Kalam. Such an intelligent person; such a fine human being. But you politician didn't even spare him and instead choose a worthless lady who had corruption charges and insignificant local polititian of Jalgaon WHO'S NAME ENTIRE COUNTRY HAD NOT HEARD BEFORE. Its simple logic your party just wanted a rubber stamp in the name of president. Imagine SHE IS SUPREME COMMANDER OF INDIA 'S THREE DEFENCE FORCES. What morale you will expect from our defence forces? Your party along with opposition joined hands, because politicians feel they are supreme and there is no place for a good person.

Dear Mr Prime minister, you are one of the most intelligent person, a most learned person. Just wake up, be a real SARDAR. First and foremost, expose all selfish politicians. Ask Swiss banks to give names of all Indian account holders. Give reins of CBI to independent agency. Let them find wolves among us. There will be political upheaval, but that will be better than dance of death which we are witnessing every day. Just give us ambience where we can work honestly and without fear. Let there be rule of law. Everything else will be taken care of.

Choice is yours Mr. Prime Minister. Do you want to be lead by one person, or you want to lead the nation of 100 Crore people?


Prakash B. Bajaj
Editor Mumbai-Times of India


PLEASE READ N FORWARD TO AS MANY PEOPLE IN YOUR CONTACT LIST..............
IF EVERYONE FORWARDING THIS MESSAGE EVERYDAY, ATLEAST 10 NEW PEOPLE, THEN IT WILL REACH 1.21 BILLIONS OF INDIA INCLUDING PRIME MINISTER.
1ST DAY
10.00
2ND DAY
100.00
3RD DAY
1,000.00
4TH DAY
10,000.00
5TH DAY
100,000.00
6TH DAY
1,000,000.00
7TH DAY
10,000,000.00
8TH DAY
100,000,000.00
9TH DAY
1,000,000,000.00
10TH DAY
1,210,193,422.00






Monday, April 4, 2011

மின்சாரம் கொடுத்தவன் இறைவன் ஆவான் – ஒரு வெற்றிக் கதை

Ratnesh Yadav, Image courtesy : Microsoft
இது வரைக் காலமும் நமது பழமொழி எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என இருந்தது. மின்சாரம் கொடுத்தவன் இறைவன் ஆவான் என இனி அது மாற்றம் பெறப் போகின்றது. ரட்னேஸ் யாதவ் 35 வயது இளைஞர் தில்லி பல்கலைக்கழகத்தில் புவியியல் படித்துவிட்டு தனது மாநிலமான விகாருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு 2003-யில் விகார் திரும்பினார். ஆரம்பக் காலங்களில் ஆமணக்கு, காற்றாடி, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார் ஆனால் அவை பெரிதாக வெற்றியளிக்கவில்லை. அதனால் 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஒரு பொறியாளத் தோழரின் உதவியோடு சாணத்தின் மூலம் எரிவாயு உற்பத்தி செய்யும் மையம் ஒன்றினை மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள தங்கா கிராமத்தில் நிறுவினார். தேசிய கிராமப்புற மின்சார திட்டம் மாவட்டத்தின் பல இடங்களுக்கு மின்சாரம் அளித்து வந்தாலும், அவை பல்வேறு காரணங்களுக்காக மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்குப் பயனளிக்கவில்லை. குறிப்பாக 72 கிராமங்கள் மின்சார வசதி இல்லாமலயே இருந்து வந்தன. அதனால் ரட்ணேஷ் யாதவ் 15 லட்சம் இந்திய ரூபாய் முதலீட்டில் அங்கு இயற்கை எரிவாயு நிலையம் ஒன்றினை நிறுவி, அந்நிறுவனத்துக்கு ஹஸ்க் பவர் சிஸ்டம் எனப் பெயரிட்டார். அந்நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 30 வாட் மின்சாரத்துக்கு வெறும் 100 ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு கிராமங்களின் வீடுகளுக்கு மின்சாரம் அளித்து வருகின்றது.

சராசரியாக அந்தக் கிராமங்களின் வீடு ஒவ்வொன்றும் இதற்கு முன்னர் மாதம் ஒன்றுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை விளக்குகளுக்கும், அதற்குப் பயன்படுத்தும் மண் எண்ணெய்க்கும் செலவிட்டு வந்தன. அந்த விளக்குகள் நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரங்கள் மாத்திரமே எரியக் கூடியவை. ஆனால் தற்சமயம் இந்த நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 15 வாட் மின்சாரத்துக்கு அதிகப் பட்சம் 80 ரூபாய்களை பெற்றுக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி முன்பெல்லாம் கிராம வாசிகள் தமது செல்பேசிகளை சார்ஜ் செய்ய பக்கத்து நகரங்களுக்கு சென்று ஐந்து ரூபாய் வரை செலவிட்டு சார்ஜ் செய்து வந்துள்ளார்கள். ஆனால் தற்சமயம் இந்நிறுவனம் செல்பேசிகளை இலவசமாக மின்னூட்டிக் கொள்ள வசதி செய்துக் கொடுத்துள்ளது.

அதே போல இந்த மின்சாரம் நிறுவனத்தைக் கவனித்துக் கொள்ள உள்ளூர் மக்களில் சிலரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளனர். தற்சமயம் இந்நிறுவனம் 60 ப்ளாண்ட்களை நடத்தி வருகின்றது இதனால் 270 கிராமங்களில் சுமார் இரண்டு லட்சம் பேர் வரை மின்சார வசதி பெற்றுள்ளனர். அதே போல இந்த இயற்கை எரிவாயு நிலையங்களின் கட்டுமானம், அதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் உள்ளூரில் இருந்தே எடுத்துக் கொள்கின்றனர். சுற்றுப்புறச் சூழலுக்கு பெரிதும் தீங்கில்லாமல் இவர்கள் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றாரள். குறிப்பாக உள்ளூர்களில் பட்டைத் தீட்டப்படும் அரிசிகளில் மிஞ்சும் உமிகளை விலைக்கு வாங்கிக் கொள்கின்றார்கள். அவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். இதனால் வீணாகப் போகும் உமிகளை விற்பதாலும் கிராம வாசிகள் பயன்பெறுகிறார்கள். அத்தோடு நிற்காமல் மின்சாரத் தயாரிப்பில் ஈடுபட்ட பின்னர் மிஞ்சும் உப பொருட்களில் இருந்து ஊதுபத்தி செய்யும் தொழிலும் நடக்கின்றன. இந்த தொழிலில் கிராம வாசிகளே ஈடுபடுவதால் அவர்கள் மேலும் நன்மை அடைகிறார்கள்.

ஆனால் கிராம வாசிகள் மின்சாரம் அதிகம் செலவாகும் குண்டுப் பல்புகளைப் பயன்படுத்த இந்நிறுவனம் தடை செய்துள்ளது. இருந்தாலும் மின்சாரம் எட்டாக்கனியாக இருந்த இக்கிராமங்கள் ஒளிப் பெற்று உள்ளன. குழந்தைகள் இரவில் படிக்க முடிகின்றது. தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. கடைகள் முன்னை விட அதிக நேரம் திறந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இரவில் நடந்து செல்லும் மக்கள் பாம்புகளுக்கு அஞ்சி வாழ்ந்தார்கள். தற்சமயம் அந்த அச்சமும் நீங்கியுள்ளது.

இவர்களின் வெற்றியைத் தொடர்ந்து ஓனர்ச்சி என்னும் நிறுவனமும் கிராமப் புறங்களுக்கு வளங்குன்றா வளங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்படத் தொடங்கியுள்ளது. அதே போல இந்நிறுவங்கள் தொடங்குவதற்கும் அவற்றின் வெற்றிக்கும் 2003 ம் ஆண்டு நடுவண் அரசு மின்சார உற்பத்திகளை பரவலாக்கக் கொண்டு வந்த திட்டங்களும், அனுமதி வழங்கலுமே பெரும் உதவியாக அமைந்தது எனலாம். இதனால் தான் சிறிய நிறுவனங்கள் மின்சார உற்பத்தியில் ஈடுபடவும் செயல்படவும் முடிகின்றது.

ரட்ணேஷ் யாதவின் இந்த முயற்சியும் உழைப்பும் நம்மை வியக்க வைக்கின்றன. தமிழ்நாட்டில் இப்படியான விடிவெள்ளிகள் மின்னும் காலம் எப்போது வரும் ????

Thursday, March 24, 2011

யாருக்கும் வெட்கமில்லை !

குடியரசுத் தலைவரின் மகளுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கி இருப்பது சம்பந்தமாக

நாளிதழில் வந்துள்ள செய்தியை தான் மேலே பார்க்கிறீர்கள் !-

1) குடியரசுத்தலைவரின் மகளுக்கு மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகர் அருகே

இருபது ஏக்கர் நிலம் மலிவு விலையில் -

2) 32,000 சதுர அடி நிலம் விளையாட்டு மைதானத்துக்காக் 30 ஆண்டுக்காலத்துக்கு

குத்தகைக்கு -

3) இதற்கான வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுக்கு ஒரு (!) ரூபாய் மட்டுமே !

4) இதே போல் 27,300 சதுர அடி நிலம் ஆரம்பப்பள்ளி மற்றும் விடுதி

கட்டுவதற்காக இலவசமாகவே அளிக்கப்பட்டு உள்ளது !



14 வயது வரை அனைவருக்கும் இலவசமாக கட்டாய கல்வி அளிப்பது நமது

அரசியல் சட்டத்தின்படி அண்மையில் பாராளுமன்றததின் மூலம் உறுதி செய்யப்பட்டு

உள்ளது. இந்த நிலையில் தனியார் ஒருவருக்கு ( அதுவும் குடியரசுத்தலைவரின்

மகளுக்கு ) சொந்தமாக ஆரம்பப்பள்ளி ஆரம்பிப்பதற்கு எதற்காக அரசு இலவசமாக

நிலம் அளிக்க வேண்டும் ?

யார் கேட்பது இந்தக் கொள்ளையைப்பற்றி – இத்தனைக்கும் இது ஒரு

ஜனநாயக நாடு - இதில் 800 கட்சிகள் வேறு !!!

மக்களை ஏமாற்றும் அரசாங்கம் !

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் புதிதாக ஒரு
சேவை வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

உடல் நலம் சரி இல்லாதவர்கள் மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்றால்,அந்த மருத்துவ
மனை 25 படுக்கைகளுக்கு மேல் கொண்டதாகவோ,
குளிர் சாதன வசதி உள்ளதாகவோ இருந்தால்,
நோயாளி தான் பெறும் மருத்துவ சேவைக்காக,
மொத்த பில்லில் 5% சேவை வரியாக மத்திய
அரசுக்கு செலுத்த வேண்டும்.

உடல் நலம் கெட்டு, நொந்து போய் மருத்துவ
சிகிச்சை பெற மருத்துவமனைக்கு போகும்
நோயாளியிடம் கூட காசைப் பிடுங்கும்
இந்த அரசு, பெரிய பெரிய முதலாளிகளிடம்,
வியாபாரிகளிடம் – நடந்து கொள்வது எப்படி
என்பது யாராவது கண்டு பிடித்துச் சொன்னால்
தான் நமக்குத் தெரிகிறது !

பொது மக்களுக்கு விவரம் தெரிந்து விடக்கூடாதே
என்று தான் சில விஷயங்களை பூடகமாக
வெளியிடுகிறார்கள். பட்ஜெட் உரையை
நிதி அமைச்சர் படிக்கும்போது, அவர் முழு
விவரங்களையும் படிப்பதில்லை. முக்கியம்
என்று அவர் கருதுவதை மட்டும் சுருக்கமாகப்
படிக்கிறார். அது இன்னும் சுருக்கமாக்கப்பட்டு
தலைப்புச் செய்திகளாக வருகிறது.

நாமோ தலைப்புச் செய்திகளை மட்டும்
பார்த்து விட்டு புதிய வரி இல்லை என்று
சந்தோஷமாகப் போய் விடுவோம்.

ஆனால் முழு பட்ஜெட்டையும் பத்தி பத்தியாக
ஆராய்ந்தால் தான், அதையும் முந்தைய வருட
வரவு செலவு விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்
தான் நடந்திருக்கும் தில்லுமுல்லுகள்
தெரிய வருகின்றன.

சாதாரணமாக நம்மைப் போன்ற பொதுமக்களுக்கு
புரியாத வகையிலேயே அந்த விவரங்கள்
அமைக்கப்பட்டிருக்கின்றன.விவரம் தெரிந்தவர்கள்
நிதானமாக உள்ளே புகுந்து ஆராய்ந்தால்
பல தகிடுதித்தங்கள் தெரிய வருகின்றன.

பி.சாய்நாத் என்கிற பொருளாதார நிபுணர் ஒருவர்
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து
கொடுத்திருக்கும் விவரங்களை பார்த்தால்
பற்றிக் கொண்டு வருகிறது. அரசாங்கம் எப்படி
எல்லாம் நம்மை ஏமாற்றுகிறது என்பது
புரிய வருகிறது.

3 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில்
ஏற்பட்ட கடும் பொருளாதாரச் சரிவு காரணமாக
உலகம் பூராவும் ஏற்பட்ட நெருக்கடியில் -
பல நாடுகளும் சிக்கித் தவித்தன.

பெரும் அளவில் வர்த்தக நிறுவனங்களும்,
தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இந்தியாவிலும் அத்தகைய சூழ்நிலையின்
பாதிப்பால்,
தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைவும்,
அதன் காரணமாக வேலையின்மையும்
ஏற்பட்டு விடக்கூடாதே என்று மத்திய அரசு
எக்சைஸ் வரியிலும்,
சுங்க வரியிலும் பல சலுகைகளை
தற்காலிகமாக அனுமதித்தது.

இந்த சலுகைகள் அளிக்கப்பட்டதன்
காரணமாகச் சொல்லப்பட்டவை -
தொழிற்சாலைகள்
நஷ்டம் அடையக்கூடாது,
உற்பத்தி குறையக்கூடாது,
தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடாது.
தொழிற்சாலைகளுக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை
ஈடுசெய்யும் விதமாக எக்சைஸ் மற்றும்
சுங்க வரிகளில் பல சலுகைகள் தற்காலிகமாக
அளிக்கப்பட்டன.

2 ஆண்டுகளுக்கு பின்னர் பார்த்தால்,
நஷ்டம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட
மேற்படி கம்பெனிகள் எல்லாம்
நல்ல லாபத்திலேயே ஓடி இருக்கின்றன.
அவைகளுக்கு சலுகைகளே
தேவைப்பட்டிருக்கவில்லை.
கொடுக்கப்பட்ட சலுகைகள் எல்லாம் -
அதிக பட்ச லாபமாக முதலாளிகளிடம்
சென்றடைந்துள்ளன.

அரசாங்கம் இதுபற்றி தெரிந்துகொண்டே
இந்த சலுகைகளை வேறு நோக்கில்
கொடுத்ததா அல்லது இந்த சலுகைகள்
தேவைப்பட்டிருக்கவில்லை என்பது பின்னால்
தான் தெரிய வந்ததா என்பது தெரியவில்லை.

ஏற்கெனவே கொடுத்த சலுகைகளே
தேவையற்றவை
என்கிற நிலையில் – அந்த சலுகைகள்
உடனடியாக வாபஸ் பெறப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 3 ஆண்டுகளாகவும்,
இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அந்த சலுகைகள்
தொடர்கின்றன.
எங்கே அவை வெளியே தெரிந்து
விடப்போகின்றனவே
என்கிற முன் ஜாக்கிரதையில் -எக்சைஸ் மற்றும்
சுங்க வரி விதிப்பில் மாறுதல் ஏதும் இல்லை
என்று சொல்லிவிட்டு அமைச்சர்
அடுத்த தலைப்பிற்கு சென்று விடுகிறார்.

தேவை இல்லாமலே தற்காலிகமாக
கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்ட
சலுகைகள் தொடர்கின்றன என்று – அமைச்சர்
வெளிப்படையாக சொல்லவில்லை.
ஆனால் மாறுதல் இல்லை என்கிறபடியால்
அந்த சலுகைகள் இந்த ஆண்டும்
தொடர்கின்றன.

விவரம் தெரியாமலா நிதி அமைச்சர்
இதைத் தொடர்கிறார் ?

ஆளும் கட்சிக்கு எந்த எந்த கம்பெனிகளிடமிருந்து
நன்கொடைகள் வருகின்றன என்று பார்த்தால்
இந்த கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

இந்த சலுகைகள் காரணமாக – அரசாங்கம் கடந்த
3 ஆண்டுகளில் இழந்த வருமானத்தைப் பாருங்கள் -

2008-09 2009-10 2010-11
எக்சைஸ் 1,28,293 1,69,121 1,98,291
வரி (கோடிகளில் )
சுங்க வரி 2,25,752 1,95,288 1,74,418

(ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுடன் வெளிவரும் -
தள்ளுபடி செய்யப்பட்ட வருமானங்கள் என்கிற
தலைப்பில் உள்ள அறிக்கைகளிலிருந்து மேற்படி
விவரங்கள் திரட்டப்பட்டு இருக்கிறது )

சாதாரண பொதுமக்களை கசக்கிப் பிழிந்து
பணம் பிடுங்கும் இந்த அரசு எவ்வளவு சாமர்த்தியமாக
பெரும் முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி வீசுகிறது.
அப்படி கொடுக்கும் சலுகைகளும் வெளியில்
தெரியாமல் எவ்வளவு சாமர்த்தியமாகப் பார்த்துக்
கொள்கிறது – பார்த்தீர்களா !

இவர்களை எல்லாம் என்ன செய்தால் தகும் ?