மத்திய அரசின் புதிய வரிவிதிப்பில் தண்ணீர்:மற்றும் தனியார் மயமாக்கப்படும் நீர்ஆதாரங்கள்.
அண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட தேசிய நீர்க்கொள்(ளை)கை-2012 கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த வரைவு திட்டத்தை ப்படித்த அனைவரும் காங்கிரஸ் அரசின் உயரிய சிந்தனையை க்கண்டும்,அதன் தொலை நோக்கு பார்வையை கண்டும் பெருமிதம் கொண்டிருப்பார்கள்.சில உப்பு போட்டு உணவு உண்பவர்களும்,சுய சிந்தனை உள்ளவர்களும் அதை கடுமையாக எதிர்த்தார்கள். நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள் என்று படித்து முடித்து விட்டு முடிவு செய்யுங்கள்..அப்படி என்ன சொல்கிறது ,புதிய வரைவு திட்டம்.?
முதலில் அதன் தேவை என்ன? இதற்கு முன் 2002ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிறது.அது நீர்ப்பயன்பாடு, நிலத்தடி நீராதாரங்கள்,அவற்றை பாதுகாப்பது, நீர்வழித்தடங்கள்,கால்வாய்கள், நீர் வள ஆதார அமைப்புகளை பாதுகாப்பது,செறிவூட்டுவது,மற்றும் மேம்படுத்துவது சம்பந்தமாகவும்,அதற்கு தேவையான நிதி ஆதார்ங்கள்,தொழில் நுட்பஉதவிகள்,மக்களிடம்விழிப்புணர்வு,துல்லிய நீர்ப்பயன்பாடு,மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை போன்றவற்றைப்பற்றிய மாநில அரசின் பங்களிப்பையும்,மத்திய அரசின் பங்களிப்பையும் பற்றியும், விளக்கமான ஒரு வரைவாக இருக்கிறது,அது இதற்கு முந்தைய 1987ல் கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க்கொள்கையை விட பலபடிகள் மேலானதாகவும்,சிறந்ததாகவும் இருந்து வருகிறது.ஆனாலும் மாநிலங்களுக்கிடையேயான நீர்ப்பங்கீடு,புதிய பாசன அமைப்புகள்,அவற்றின் செய்ல்பாடுகள் எதுவும் இந்த வரைவில் தெளிவாக சொல்லப்படவில்லை, ஸ்வஜல்தார,iam warm திட்டங்கள்,சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ள வேளையில் upa2 அரசாங்கம் இரண்டு சமூக நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது
.1. நிலத்தடி நீர்,உள்மாநிலத்தில் உள்ள நீர்னிலைகள்,மற்றும் நிலத்தடி நீராதார்ங்களில் மக்களுக்கோ,அந்தந்த மாநில அரசுகளுக்கோ எந்த வித உரிமையும் இல்லை,அனைத்து மத்திய அரசுக்கே உரியது என்றும் அவை தனியாருக்கு ஏல முறையில் திறந்து விடப்படும் என்றும்
,2.தண்ணீர்,மற்றும் கழிவு நீருக்கு வரி விதிப்பது என்றும் முடிவு எடுத்து அறிவித்து இருக்கிறது..மேலும் பாசனம்,குடி நீர் வினியோகம்,கழிவு நீர் மேலாண்மை,சுகாதாரம் ஆகிவற்றில் இருந்து அரசாங்கம் முழுவதும் விலகி தனியார்களை இந்த துறையில் ஈடுபடுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது..
இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், இரு அரசாங்கங்கள் பட்டியல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இதில் மாநில பட்டியலில் 17-வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை அடங்கியுள்ளன. புதிய கொள்கை இதை மறுத்து ஒரு சட்டம் உரு வாக்கப்பட வேண்டுமென்கிறது. அதேபோல 1882-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையில்லை என்று மாற்றவேண்டுமென்கிறது புதிய கொள்கை. .இதன் படி குடிதண்ணீரோ,ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்கப் பட வேண்டும் என்கிறது மத்திய அரசு.
இதில் ஒரேயடியாக மக்களின் பாரம்பரிய உரிமையும்,மா நிலங்களின் உரிமையையும்,உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் ஒருங்கே பறிக்கிறது.
மேலும் இதன் படி கிராமங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40லிட்டருக்கு மிகாமலும், நகரத்தில் ஒரு நபருக்கு 80 லிட்டருக்கு மிகாமலும் குறைந்த பட்ச விலையில் வழங்கவும், அதற்கு மேல் உபயோகப்படுத்தப்படும் நீருக்கு அடுக்கு முறையில் வரி விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் நீங்கள் வெளியேற்றும் கழிவு நீருக்கு தனி வரி, என்ற புதிய சிந்தனையையும் முன் வைத்திருக்கிறது..
இதோடு 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது.அதாவது முதலில் குடிநீர்,
2) விவசாயம்,
3) நீர் மின்சாரம்,
4) சுற்றுச்சூழல்,
5) விவசாயம் சார் மற்றும் விவசாயம் சாரா தொழில்கள்,
6) போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடுகள் என்பதுதான் அந்த முன்னுரிமை வரிசை.
இனி அப்படி இல்லாமல் குடி நீருக்கோ,விவசாயத்திற்கோ நீர் இல்லாவிட்டாலும் வாட்டர் தீம்பார்க்குகளுக்கும்,அரசியல் வாதிகளின் பெருந்தொழிற்சாலைகளுக்கும் நீர் தங்கு தடையின்றி வழங்கப்படும்,இது தான் அரசு சொல்ல விரும்பும் செய்தி..
சாதாரண மக்கள் நீர் குடிக்கும் உரிமையை கூட பறித்து அதை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று தான் இந்த தேசத்தை வளப்படுத்த வேண்டுமா?மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திரு.மன்மோகன்சிங் அவர்களே(மனசாட்சி இருந்தால்) இது தேசத்தையும்,மக்களையும் வளப்படுத்தத்தானா இந்த வரி.மனித இனத்தின் அடிப்படை உரிமையான தண்ணீரை வெறும் வணிகப்பொருளாக மட்டுமே பார்க்கும் காங்கிரஸ் அரசின் பார்வையே வக்கிரமானதாகவும்,அருவெறுப்பூட்டுவதாகவும் உள்ளது.இது உங்களையும் நம்பி ஓட்டு போட்ட மக்களை ஒருங்கே வஞ்சிக்கும் செயல் அல்லாமல் வேறு என்ன? 2009ல் ஐ. நா வில் குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளுக்கும், நீரைத்தாயாகவும், கடவுளாகவும் வழிபடும் பாரதப்பண்பாட்டில் வந்து விட்டு அதே அசிங்கத்தை நீங்கள் உங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது திணீக்கிறீர்களே இது ஞாயம் தானா?
விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. நீங்கள் உலக வங்கியின் ஒரு பொருளாதார அடியாளை விட மோசமாக செயல்படுவதும்,இந்தியாவையும்,அதன் ஆன்மாவையும் கூட யாரிடமாவது அடகு வைத்து பொருளீட்டலாம் என்று நினைக்கிறீர்களே, நீங்கள் படித்த கல்வியும்,உங்கள் நாகரீகமும் இவ்வளவு தானா? தண்னீர் என்பது வெறும் லாபம் மட்டுமே ஈட்டும் நீலத்தங்கமாக மட்டுமா உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான நோகளால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 இலட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக் கொடிய இருபெரும் நோகளான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் நோ தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை..இவற்றை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாமல் இந்திய தண்ணீர் சந்தையை உலகப்பெரு நிறுவனங்களுக்கு ஏல முறையில் திறந்து விடலாம் என்று யோசனை சொல்ல உங்களுக்கும்,உங்கள் அமைச்சரவைக்கும் வெக்கமாக இல்லை. class 7ல் நீர் என்பது வெறும் ஒரு வரிவிதிப்பு பண்டமாக மட்டுமே பார்க்கும் பார்வையை என்ன சொல்வது?
7. WATER PRICING
7.1 Over and above the pre-emptive uses for sustaining life and eco-system,
water needs to be treated as an economic good and therefore, may be priced to
promote efficient use and maximizing value from water. While the practice of
administered prices may have to be continued,
நீருக்கு வரி விதப்பதிற்கு மன்மோகன்,சோனியா சொல்லும் ஞாயம் என்ன என்றால் 2 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் 80 கோடி பேர் உள்ளனர்,அரசின் பெரும்பாலான சேவைகளான ரயில்,பொதுபோக்குவரத்து மற்றும் இன்ன பிற சமூக நலத்திட்டத்தின் பயனாளிகள் நடுத்தர மக்களும் கீழ் நடுத்தர,மற்றும் வறுமைக்கோட்டுக்கு அருகிலும் கீழும் வசிக்கும் மக்கள் தான் .ஆனால் அவர்கள் வரி எதையும் நேரடியாக செலுத்துவதில்லை.எனவே இவர்களை நேரடியாக வரி செலுத்தும் அமைப்புக்குள் கொண்டு வரும் விதமாக இவர்கள் அதிகம் உபயோகிக்கும் தண்ணீர் மற்றும் உப்பு மீது வரி விதிக்கலாம் என்ற அரிய கருத்தை முன் வைக்கிறார்கள்.மன்மோகன் சொல்ல வருவது என்னஎன்றால் பணக்காரகளுக்கும்,பெரும் பணக்கரார்களுக்கு மட்டுமே அதிக வரி என்பது அநியாயம்,ஏழைகளும் ,பரம ஏழைகளும், நடுத்தர மக்களும் அதிகமாக அரசாங்கத்தை சார்ந்து இருந்து கொண்டு சுகமாக வாழ்கிறார்கள் அது நியாயமிலை.எனவே தான் அவர்கள் உபயோகிக்கும் தண்ணீருக்கு வரி விதிக்க வேண்டும் என்ற அரிய யோசனையை முன் வைக்கிறார்..அலுவாலியா என்ற மேதை சொல்கிறார் ஒரு ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி 2,00,000 லிட்டருக்கு மேல் தண்ணீரை செலவு செய்து விவசாயம் பார்க்கிறார்,அவர் ஈட்டும் வருமானமோ ஒரு லட்சத்திற்கும் கீழ்,அரசுக்கும் வருமானம் இல்லை வெறும் செலவு தான் .இதுவே ஒரு டாஸ்மாக் சேல்ஸ்மேனோ,தரகு வணிகத்தில் இருப்பவரோ 40,000 லிட்டரை மட்டுமே உபயோகிக்கிறார் ஆனால் அரசுக்கு இவரால் வருமனம் வருகிறது..எனவே நீரை வீணாக்கும் விவசாயிக்கு அதிக வரியும்,குறைவான நீரை உபயோகிக்கும் தரகருக்கு குறைவான வரியும் விதிக்க்கப்பட வேண்டும் என்கிறார். ஞாயம் தானே?
ஒரு உயிர் வேலியை ஏற்படுத்தி உப்புக்கு வரி விதித்து மக்களின் மீது பஞ்சத்தையும்,பசி,பட்டினியையும் செய்ற்கையாக திணித்த ஆலன் ஆக்டேவியன் ஹீயூமின் வாரிசுகள் அல்லவா? வேறு எப்படி யோசிப்பார்கள்.?உப்பு வேலி ,உயிர் வேலி பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளை படித்தால் இப்போது கூட மனம் படைபதைக்கும் http://www.jeyamohan.in/?p=21029,
http://www.jeyamohan.in/?p=21506.
நீர் என்பது வெறும் பொருளாதாரப்பண்டமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சமூக நீதிக்கு எதிரானதாகும்.
ஒரு அரசின் கடமை என்பது அதன் மக்களுக்கு பாதுகாப்பான குடி நீர் வழங்க வேண்டியது, ஆனால் அரசு குடி நீர்,சுகாதாரம்,கல்வி,தொலைதொடர்பு,ராணுவம்,வங்கி,காப்பீடு,சுரங்கம்,ஆற்றல் இவற்றை தனியார் வசம் ஒப்படைத்து விட்டு,சாராயம் காய்ச்சுவது,விபாசாரம் செய்வது,இன்ன பிற போதை வஸ்துக்களை விற்பது போன்ற சேவைகளை மட்டுமே செய்யலாம் என்ற முன் யோசனையில் செயல்படுவதாக தெரிகிறது.
மேலும் 40 லிட்டருக்கு குறைவான நீரை ஒரு மனிதன் எப்படி பயன்படுத்த முடியும் இந்த நாகரீக உலகில்,இந்தியர்களின் உணவுப்பழ்க்கம் மற்றும் கழிவறை,கழிவு பழக்கங்களை கொண்டு சராசரி இந்தியனுக்கு ஒரு நாளக்கு 66 லிட்டர் நீர் தேவை என்று உல சுகாதர நிறுவனம் சொல்கிறது..மேலும் ஒரு மனிதனின் குடி நீர்,உணவு,சுகாதார நடவடிக்கைகள்,தொழில் உபயோகங்கள் இவற்றை கருத்தில் கொண்டால் ஒரு மனிதனின் percapita water need 185 லிட்டர் ஆகும்.40லிட்டருக்கு மேல் செலவாகும் 145லிட்டருக்கும் அவன் வரிகட்டினால் மட்டுமே நீரைக்குடிக்கவோ,கழிவறையில் சுத்தம் செய்யவோ முடியும்..வரி கட்ட முடியாதவர்கள் நீர் உபயோகிப்பதை சட்டம் போட்டு தடுப்போம் என்கிறது மத்திய அரசு.(பார்க்க 7ம் படிவம்)..ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய 600 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.இப்போது அரிசி விலை 40 ரூபாய்,இனி 100ரூபாய்க்கு மேல் போனால் யாரும் அதிசயப்படாதீர்கள்.
நிலத்தடி நீரை நீங்கள் உபயோகித்தால் அதற்கும் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். நீர் என்பது பாரம்பரியமான உரிமை இல்லை அது ஒரு பொருளாதார கருவி மட்டுமே.என்கிறது புதிய வரைவு.இனிமேல் நீங்கள் தண்னீர் தாகம் அடித்தால் பெக்டெல்,வெண்டி,டாடா,ரிலையன்ஸ் போன்ற தண்ணீர் வழங்கும் பெரு நிறுவங்கள் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் தண்ணீர் குடிக்க முடியும்.மீறி தாகம் அடிக்கிறது என்று நீரைக்குடித்தால் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் ஜாக்கிரதை.இவ்வளவு நல்ல சட்ட முன்வரைவை வைத்து மக்களின் உரிமைகளை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்குகிறது.
நீர் என்பதை தனியார்மயமாக்குவதாலும்,அரசின் கண்காணிப்பிலிருந்து விலக்குவதாலும் பெரும்பான்மையான மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் மறுக்கப்படுகிறது.இதனால் ஏற்படும் சமூக சீர்குலைவுக்கும்,பல்லாயிரம் மக்களின் சாவிற்கும் ,சுகாதாரக்கேடான வாழ்விற்கும் இந்த காங்கிரஸ் அரசே பொறுப்பேற்க வேண்டும்.
தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது உங்களது வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆகவேண்டிய விசயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டு வந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.அதை இந்திய அரசு மறுபரிசீலனை செய்து தன் தாய் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறது..
இதையும் வழக்கம் போல ஏற்று கொள்ளப்போகிறோமா? இல்லை நம் எதிப்பை பதிவு செய்யப்போகிறோமா?
http://mowr.gov.in/writereaddata/linkimages/DraftNWP2012_English9353289094.pdf
http://mowr.gov.in/writereaddata/linkimages/nwp20025617515534.pdf
http://www.newstatesman.com/environment/2010/03/water-cyprus-pakistan-yemen
http://www.globalissues.org/article/601/water-and-development
No comments:
Post a Comment